Wednesday, March 4, 2009

வழக்கொழிந்த சொற்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் கார்த்திகைப் பாண்டியன் வழக்கொழிந்தசொற்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.இரண்டு நாளாக இந்த பக்கம்வரததால் நேற்று என்னை தொடர்பு கொண்ட கா.பா. என்ன நண்பா பதிவபார்த்தியா என கேட்டபோதுதான் தெரிந்தது "தல" நம்மள சிக்கவச்சமேட்டரு. சரிபார்க்கலாம்னு சொல்லிட்டு.
உடனே என் நண்பன் தமிழ் புலவனை கூப்பிட்டு எனக்கு பத்து "வழக்கொழிந்தசொல்" சொல்லுடான் கேட்டேன், அவனோ வழகொழிந்த சொல்லா? அல்லதுவழக்குமருவிய சொல்லா?அப்படின் கேட்க. எனக்கு சந்தேகம் வந்து மறுபடியும்பதிவை பார்த்து,வழக்கொழிந்த சொற்கள்தான் சொல்லிட்டு ஆர்வக்கோளாறுகாரணமாக இரண்டுக்கும் என்ன வித்தியாசம்னு கேள்வி கேட்க. அதகாகப்பட்டதுவழக்கத்திலிருந்து முற்றிலும் அழிந்த சொல்,வழக்கத்தில் இருக்கு ஆனால்உச்சரிப்பு மட்டும் மருவி இந்த மாதிரி...........இந்த மாதிரி......... வரும் ஆனா வராதுகணக்கா சொல்ல ஆளைவுடுங்கட சாமினுட்டு துங்க போனேன்.
அப்ப பார்த்து கார்த்திகைப் பாண்டியன் போன்போட்டு கவின் மெயில்அனுப்பிட்டாரு அவர் வெளியூரில் இருப்பதால் எமுதமுடியவில்லை. (தப்பிக்கஇப்படியும் வழியிருக்கா ) எனவே நீங்க கண்டிப்பாக பதிவு எமுதிஆகுனும்ன்மெரட்ட.என்னங்கட வம்பபோச்சி அப்படின்ங்கோ, சரி நம்ம கொள்கைபடி(அதுஎன்ன உங்க கொள்கையின் நீங்க கேட்கறது காதுல கேக்குதுங்க) அதானுங்கசரியா? தப்பா? மனசுல இருக்கறத சொல்லிவிடு தப்பா இருந்ததிருத்திக்கோ,சரியா இருந்த மெச்சிக்கோங்கற கொள்கைபடி எனக்கு தெரிந்ததைஎமுத ஆரம்பிச்சனுங்க இத படிக்கறதும் இடிக்கறதும் உங்க விருப்பங்கோ.




வழக்கொழிந்த சொற்கள்
ஆர்கலிகடல்
சூத்திரம் - வஞ்சனை, பழிவாங்கு
அடை - முல்லை
எச்சம் - மிச்சப்படும் பொருள்
புறவுகாடுகள்
வைகல்பொழுது
உதிரம் - இரத்தம்
உகிர் - நகம்
தக்கிணைகாணிக்கை
முகட்டு வழிவாயிற்படி
அளாவிகரைத்தல்

வட்டார
வழக்கொழிந்த சொற்கள்
தொறப்புகுச்சி-சாவி
பைய - மெல்ல
தண்டல்- வரி
வெள்ளனா -அதிகாலையில்
வெகுளான்-கோபகாரன்
தப்பா இருந்த சொல்லிருங்க.அப்புறம் யாரவது இரண்டு பேரை பதிவுக்குஅழைக்கவேண்டுமாம்.

"வென்பா கவிஞர்" அகரம் அமுதா
"சிலகவிதைகள்" உமா
அன்போடு வருக
பதிவுவொன்று இடுக

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா.. ராசா.. எப்படி இப்படி.. எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டு கும்முன்னு எழுதி இருக்கேங்க.. எளிய சொற்கள்.. நல்ல பதிவு தலைவா.. வாழ்த்துக்கள்..

ஆதவா said...

சூத்திரம், தக்கினை... இரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல.

மற்றபடி கொடுத்த வேலையை சரியாக மட்டுமல்லாமல் தரமாகவும் செய்திருக்கிறீர்கள். வட்டார வழக்கொழிந்த சொற்களும் பிரமாதம்.

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஐயா.. ராசா.. எப்படி இப்படி.. எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டு கும்முன்னு எழுதி இருக்கேங்க.. எளிய சொற்கள்.. நல்ல பதிவு தலைவா.. வாழ்த்துக்கள்..//

நன்றிங்க.மறுபடியும் ஏதாவது வம்புல மாட்டிவிடதிங்கோ.

சொல்லரசன் said...

ஆதவா said...
//சூத்திரம், தக்கினை... இரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல.//

சூத்திரம் செய்தலின், கள்வன் ஆதல் அறிப.
முதுமொழிக் காஞ்சி

// தக்கினை... //


தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஆசாரக்கோவையில் வரும் செய்யுள்.
இங்கு தக்கிணை என்பது ஆசிரியர்க்கு கொடுக்கும் தட்சனையை குறிக்கும்